கார்களின் வகைகள் 

கார்களை  அதன் அமைப்பு , எஞ்சின் போன்றவற்றை வைத்து பல்வேறு வகைகளாக பிரிக்கலாம் இந்த பதிவில் வாகனங்கள் எவ்வாறு வகைபடுத்தப்படுகின்றது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அமைப்பு/தோற்றம் வைத்து வகை படுத்துதல்.



1. Hatchback (ஹட்ச்பக் )

இவ்வகை கார்கள் இரண்டு வரிசை இருக்கை வசதியும் அதனோடு ஒருங்கினைந்த கார்கோ வசதி (Dikki Space) கொண்டதாக இருக்கும். 
அதாவது பின்புறம் சரக்கு வைக்க சிறிய டிக்கியை கொண்ட வாகனங்கள் இவையாகும்.

உதாரணம் : Swift , Alto, Ford Figo, Hyundai i10, Tata Nano, Tata Tiago, Datsun Go.


ஒருங்கினைந்த கார்கோ வசதி




2. Sedan - Notch Back - Saloon - 3 Box car


இவ்வகை கார்கள் இரண்டு வரிசை இருக்கை வசதியும் , தனிப்பட்ட  கார்கோ வசதி (Dikki Space) கொண்டதாக இருக்கும். இவ்வகை கார்கள்  டிக்கி அதிக சரக்கு வைக்கும்விதமாக அதிக இட வசதியோடு இருக்கும் .




தனிப்பட்ட  கார்கோ வசதி

3.SUV - Sports Utility Vehicle


இவ்வகை வாகனங்கள் சாலைகளிலும், சாலை இல்லாத கரடு முரடன பாதைகளிலும் செல்ல தயாரிக்கப்பட்டவை. இந்த வாகனங்களின் எஞ்சின் பவர் நாலு சக்கரத்திற்கும் செல்லும் வன்னம் வடிவமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் ஆகும். 

அதாவது இதற்கு முன் குறிப்பிடப்பட்ட   Hatchback , Sedan  வகை வாகனங்களின் எஞ்சின் பவர் முன் சக்கரங்களுக்கு மட்டுமே செல்லும், பின் சக்கரங்கள் சப்போர்டிங் வீலாகவே இருக்கும் , 

ஆனால் SUV வகை வாகனங்களின் எஞ்சின் பவர் நான்கு சக்கரங்களுக்கும் செல்லும் விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்த SUV கார்கள் பெரிய சக்கரங்கள் கொண்டதாக இருக்கும் இதனால் (Ground Clearance) காரின் அடிபகுதி தரை அளவை விட்டு அதிக அளவிலே இருக்கும் அதனால் கரடு முரடனா சாலையிலும் எளிதாக செல்லலாம்.